'கோவை, மதுரை உள்பட 5 மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள்' - நிதியமைச்சர்

கோவை, மதுரை உள்பட 5 மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
'கோவை, மதுரை உள்பட 5 மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள்' - நிதியமைச்சர்

கோவை, மதுரை உள்பட 5 மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.

பேரவையில் பேசிய அவர் தொழில் துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அப்போது பேசிய அவர்,

'2030 ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற ஏற்றுமதி இலக்கை தமிழ்நாடு அடைய, முதல்வரால் செப்டம்பர் 2021 இல் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாட்டில் ஏற்றுமதி நிறுவனங்களுக்குத் தேவையான பொதுக் கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி உருவாக்கப்படும்.

தொழிற்சாலைகள், தொழில் கூட்டமைப்பினர் பங்களிப்புடன், திறன்சார்ந்த மையங்கள், பரிசோதனை மையங்கள், ஏற்றுமதி கிடங்குகள், உள்நாட்டுக் கொள்கலன் கிடங்குகள் போன்ற கட்டமைப்புகளை அமைப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியும், தோல் சார்ந்த தொழில்களும் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. வேலைவாய்ப்புகள்நிறைந்த இத்துறைகளை மேலும்வளர்க்கும் வண்ணம், புதிய காலணி மற்றும் தோல் தொழில் மேம்பாட்டுக் கொள்கை ஒன்று வெளியிடப்படும்.

மாநிலம் முழுவதும் பரவலான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்களை அரசு அமைக்கும். இந்தத் தொழில் பூங்காக்கள் வாயிலாக 50,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும்.

பிள்ளைப்பாக்கம் மற்றும் மாநல்லூரில் மின்னணுப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டுசிறப்பு தொழிற்தொகுப்புகள், ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் நிறுவப்படும். போக்குவரத்தை சீராக்கவும்,கனரக வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளை முறைப்படுத்தவும், செய்யாறு மற்றும் கும்மிடிப்பூண்டியில் சரக்கு வாகன முனையங்கள்அமைக்கப்படும்.

இம்மதிப்பீடுகளில் தொழில் துறைக்கு 3,267.91 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com