
தமிழக சட்டப்பேரவையில் இன்று, 2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, நிதிநிலையின் அறிவிப்பாக தமிழக மின்பகிர்மான கழகத்தின் ரூ.13,000 கோடி இழப்பை அரசே ஏற்கும் எனவும் மின்கட்டண மானியமான ரூ.9,379 கோடியை அரசு வழங்கும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...