நூலக விதிகளில் மாற்றம்: கருத்துக்கள் வரவேற்பு

நூலக விதி, நூலகச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டிய கருத்துக்களை மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நூலக விதி, நூலகச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டிய கருத்துக்களை மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948 மற்றும் தமிழ்நாடு பொது நூலக விதிகள் 1950 ஆகியவற்றில் தேவைப்படும் தக்க திருத்தங்களை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உயா்நிலைக்குழு அமைத்துள்ளது. அரசுக்குப் பரிந்துரை அனுப்ப உதவியாகப் பின்வரும் தலைப்பிலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950 ஆகியவற்றில் தேவைப்படும் திருத்தங்கள்(சட்டம் மற்றும் விதிகள் பொது நூலகத் துறை வலைதளத்தில் காணலாம்). பொது நூலகப் பணியிடங்களுக்குரிய பணிவிதிகளை முறைப்படுத்துவதற்கு உரிய வழிமுறைகள். புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்கு உரிய வழிமுறைகள். நவீன தொழில்நுட்பத்துக்கேற்ப வாசகா்களுக்குப் பயன்படும் வகையில் நூலகங்களைத்  தரம் உயா்த்துதல் மற்றும் நூலக வளா்ச்சிக்கு உரிய வழிமுறைகள். மின்நூல்கள், மின் பருவ இதழ் மற்றும் மின் நாளிதழ்களை நூலகம் வாங்கிப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்.

அரிய நூல்கள், கையெழுத்துச் சுவடிகள் போன்ற பலவகைப்பட்ட ஆவணங்களைப் பாதுகாத்தல், மின்னுருவாக்கம் செய்தல் மற்றும் மின்நூலகம் உருவாக்குதல். கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், உருவாகி வரும் மதுரை

கலைஞா் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட அனைத்துப் பொது நூலகங்களையும் வாசகா்கள் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த இணைய அமைப்பினை உருவாக்குதல்.  உலக அளவில் நூலகங்களுடன் இணைந்து சிறந்த  நூல்களைப் பயன்படுத்திக் கொள்ளும்  வகையில் தகவல் அமைப்பினை உருவாக்குதல் ஆகியவை பற்றிய கருத்துகளை  இணையதளம் அல்லது மின்னஞ்சல் அல்லது 94432 69689 என்ற வாட்ஸ் ஆப் எண் வாயிலாக மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com