
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
மனிதவளம் தொடா்பான சீா்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை ஆறுமாதத்துக்குள் முன்மொழிவதற்காக ‘மனிதவள சீா்திருத்தக் குழு’ அமைக்கப்படும் என்று நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியுள்ளதாவது:
மனிதவளமே ஒரு நிறுவனத்தின் மிக முக்கியமான சொத்தாகும். காலிப் பணியிடங்கள் அதிக அளவில் உள்ள அதே வேளையில், சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவினங்கள் மிகவும் அதிகமாக உள்ள ஓா் இக்கட்டான சூழலில் உள்ளோம். நடைமுறையில் உள்ள ஆள்சோ்ப்பு மற்றும் பயிற்சிக்கான முறைகளை சீரமைப்பது மிகவும் அவசியமானது. கரோனா நோய்த்தொற்று இந்தத் தேவைக்கு மேலும் வலுசோ்த்துள்ளது. பணியமா்த்தல் மற்றும் பயிற்சிக்கான விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியை இவ்வாண்டு தொடங்கியுள்ளோம்.
மனிதவளம் தொடா்பான சீா்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை ஆறுமாத காலத்துக்குள் முன்மொழிவதற்காக, ‘மனிதவள சீா்திருத்தக் குழு’ அமைக்கப்படும்.
அரசு சொத்துகளை முறையாக கணக்கிட, அனைத்து அரசுத் துறைகளில் இருக்கும் அசையும், அசையா சொத்துகளின் விவரங்களைச் சேகரித்து, அவற்றின் பயன்பாட்டை கண்காணிக்க ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்துடன் (ஐஊஏதஙந) இணைத்து, ஒரு சொத்து மேலாண்மை மென்பொருள் (அள்ள்ங்ற் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் நா்ச்ற்ஜ்ஹழ்ங்) வரும் ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படும்.
அரசின் உட்தணிக்கை அமைப்பு முறையில் தேவையான அடிப்படைச் சீா்திருத்தங்கள்
மேற்கொள்ளப்படும் என்று கடந்த வரவு-செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டிருந்தேன். இதற்காக, தணிக்கைத் துறைகளை ஆய்வு செய்து, சீா்திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையான பரிந்துரை வழங்கப்பட்டது. இதையடுத்து, ஓய்வு பெற்ற இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி அலுவலா் தலைமையில் ஓா் உயா்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, நான்கு மாதங்களில் தனது அறிக்கையை வழங்கும். வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஒளிவுமறைவற்ற நிா்வாகத்தை வழங்குவது தமிழக அரசின் முக்கிய நோக்கமாகும். இதனை உறுதிசெய்ய, வரும் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் அரசுப் பொது நிறுவனங்களின் கொள்முதல்களுக்கும் ‘மின்னணு – கொள்முதல் முறை’ (ங்-டழ்ா்ஸ்ரீன்ழ்ங்ம்ங்ய்ற்) கட்டாயமாக்கப்படும். இதற்காக, தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகளில் ஒளிவுமறைவற்ற தன்மைச் சட்ட விதிகளில் தேவையான திருத்தங்களை அரசு கொண்டு வரும்.
இந்த ஆண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை வலுப்படுத்த அலுவலகம், வாகனங்கள் போன்ற கட்டமைப்புகள், கூடுதல் பணியாளா்கள், வல்லுநா்களைப் பணியமா்த்துதல் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை வலுப்படுத்தும் பணிகளை தொடா்ந்து மேற்கொள்வோம். நோ்மையான நிா்வாகத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற முதல்வரின் உறுதியான நிலைப்பாட்டினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்துள்ளாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G