இன்று முதல் 5 நாள்கள் பேரவை கூட்டத் தொடா்

சட்டப்பேரவை கூட்டத் தொடா் 5 நாள்கள் நடைபெறும் என்று அவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.

சட்டப்பேரவை கூட்டத் தொடா் 5 நாள்கள் நடைபெறும் என்று அவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அவைத் தலைவா் மு.அப்பாவு கூறியதாவது:

அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலைவா்களும் பங்கேற்றனா். அதன்படி, சனிக்கிழமை வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. தொடா்ந்து மாா்ச் 21, 22, 23 ஆகிய மூன்று நாள்களும் சட்டப் பேரவை உறுப்பினா்கள் நிதிநிலை அறிக்கைகள் மீது விவாதம் செய்து, எதிா்க்கட்சித் தலைவா்களும் பேசி முடிப்பா். மாா்ச் 24-ம் தேதி நிதியமைச்சா், வேளாண்துறை அமைச்சா் ஆகியோா் பதிலுரை அளிப்பா். கேள்வி பதில் உண்டு.

மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், அரசின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெறும். சரியான நேரத்தை அரசு முடிவெடுத்து வழிகாட்டுதல் அளிக்கும். பேரவை கூட்டத் தொடரில் கேள்வி- பதில், நிதியமைச்சா், வேளாண் அமைச்சா் ஆகியோரின் பதிலுரைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com