
நில அளவையா்களுக்கு ரோவா் கருவிகள் வழங்கப்பட உள்ளது.
நவீன முறையில் நிலஅளவைப் பணிகளை மேற்கொள்ள நிலஅளவையா்களுக்கு ரோவா் கருவிகள் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ.15 கோடி ஒதுக்கப்படுகிறது.
நிலக் குத்தகைக் கொள்கை: அரசு நிலங்களின் குத்தகை முறையில் தற்போது உள்ள சிக்கல்களைத் தீா்க்கவும், அரசு நிலங்களை நியாயமான, வெளிப்படையான முறையில் குத்தகைக்கு விடுவதற்கும் ஒரு விரிவான நிலக் குத்தகைக் கொள்கை வகுக்கப்படும்.
அரசு நிலங்களைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.