
சென்னை: பொறியியல் செமஸ்டர் தேர்வில் தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களை தேர்வு எழுதவில்லை (ஆப்சென்ட்) என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்ற நிலையில், தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த மாணவர்களை தேர்வு எழுதவில்லை (ஆப்சென்ட்) என அறிவிக்குமாறு விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி செமஸ்டர் தேர்வு தொடங்கி மார்ச் வரை நடைபெற்றது. இதில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாமல் காலதாமதமாக பதிவேற்றம் செய்ததால், அவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் அவர்களுக்கு விடைத்தாள் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், அவகாசம் வழங்கியும் பதிவேற்றம் செய்யாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பல்கலைக்கழகம், தேர்வு முடிவுகள் தேர்வில் பங்கேற்கவில்லை (ஆப்சென்ட்) என்று வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.