கிண்டி கிங் மருத்துவமனை: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் 

சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 
கிண்டி கிங் மருத்துவமனை: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் 

சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கிங் ஆய்வகம் 122 ஆண்டுகள் பழைமையானது. ஆங்கிலேயா் காலத்தில் தொடங்கப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 12 லட்சம் தடுப்பூசி மருந்துகளைத் தயாரித்து நோய்த் தடுப்பில் முன்னிலை வகித்தது. சின்னம்மை, காலரா, ஸ்பானீஷ் ஃபுளு, டெங்கு, சிக்குன்குன்யா, பன்றிக்காய்ச்சல் ஆகிய நோய்த் தாக்குதல்களில் இருந்து மக்களைக் காக்க இந்த ஆய்வகம் பெரிதும் பயன்பட்டது. 

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பன்றிக் காய்ச்சல் பரவியபோது, சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனைகளும், தொற்றாளா்களுக்கான படுக்கை வசதிகளும் கிங் ஆய்வகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுமாா் 8 ஏக்கா் பரப்புக்கும் அதிகமான இடத்தில் அமைந்துள்ள கிங் ஆய்வகத்தில் பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, கிங் நோய்தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமையவுள்ள 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரூ.250 கோடியில் 4.89 ஏக்கரில் 6 தளங்கள் கொண்ட பன்னோக்கு மருத்துவனை கட்டடம் அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com