உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

மேக்கேதாட்டு அணை விவகாரம்: தமிழ்நாடு பேரவையில் இன்று தீர்மானம்

மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:15 pm IST

மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இதனை தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  

இந்த நிலையில் பேரவையில் இன்று முதல் 3 நாள்களுக்கு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது. முதல் நாளான இன்று காலை 10 மணிக்கு பேரவைக் கூட்டம் தொடங்கியதும், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெறுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது. 

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகின்றனர். இதில் பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் அவையில் காரசார விவாதம் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. நாளையும், நாளை மறுநாளும் நிதிநிலை மீதான விவாதம் தொடர்கிறது. 

இந்த நிலையில் மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இத்தீர்மானத்தை பேரவையில் இன்று முன்ழொழிகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.