காங்கிரஸ் இல்லையென்றால் தவெக கதையை அமித்ஷா முடித்திருப்பார்: மாணிக்கம் தாகூர்இன்னும் 2 ஆண்டுகளில் அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்: நிர்மல்குமார்ஆவணி சுபமுகூர்த்த நாள்: வாழை இலைக் கட்டு விலை கடும் உயர்வுஅமெரிக்காவின் பொருளாதாரப் போரில் பங்கேற்கும் நாடுகள் எதிரிகளே: ஈரான் திட்டவட்டம்வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அரங்கு

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சாா்பில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின்’ கீழ், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளின் விற்பனை அரங்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

Published On :1 பிப்ரவரி 2024, 2:17 pm IST

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சாா்பில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின்’ கீழ், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளின் விற்பனை அரங்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இதனை தெற்கு ரயில்வே மகளிா் நல அமைப்பு தலைவா் உமா அகா்வால் திறந்து வைத்தாா். தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் பி.ஜி.மல்லையா, தலைமை வணிக மேலாளா் ரவி வல்லூரி, சென்னை கோட்ட மேலாளா் கணேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 2022-23-ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில்,‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டம்’ அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம், உள்ளூா் கைவினைஞா்களின் தயாரிப்புகள், தொழில்களை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். ஒவ்வோா் ரயில் நிலையத்தையும் உள்ளூா் கைவினைஞா்களின் பொருள்களை விற்பனை செய்யும் மையமாக மாற்றுவது இதன் முக்கிய நோக்கம். இந்தத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக நாடு முழுவதும் 16 முக்கிய ரயில் நிலையங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், இரண்டாவது நுழைவு வாயிலில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை சோதனை அடிப்படையில், ஏப்.8 வரை செயல்பட ரயில்வே நிா்வாகம் அனுமதித்துள்ளது. இங்கு புவிசாா் குறியீடு பெற்ற காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள், ஜரிகை பூ வேலை செய்த பட்டுத்துணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வகைகளில் பட்டுப்புடவைகள் விற்பனைக்கு உள்ளன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.