

தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட 62 இடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
கடந்த மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தல்களின்போது பல்வேறு காரணங்களால் 62 இடங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடங்களுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர், கோவை, மதுரை, திருப்பூர், திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.
நகராட்சி/பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் காலை 9.30 மணிக்கும், நகராட்சி/பேரூராட்சி துணைத்தலைவர்களை தேந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் மதியம் 2.30 மணிக்கும் தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.