ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் மாணவர் கைது

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 மாதங்களுக்கு பின்னர் ஐஐடி முன்னாள் மாணவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். 
ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் மாணவர் கைது

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 மாதங்களுக்கு பின்னர் ஐஐடி முன்னாள் மாணவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். 

2017 ஆம் ஆண்டு முதல் சென்னை ஐஐடியில் தன்னுடன் பயிலும் மாணவர் கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி தனது துறை பேராசிரியரிடம் புகார் அளித்துள்ளார். மாணவியின் புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், மனவேதனையில் இருந்தவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் 2021 ஜூன் 9 ஆம் தேதி மயிலாப்பூர் மகளிர் காவல்நிலையத்தில் மாணவர்கள் உள்பட 8 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இருப்பினும் 9 மாதங்களை கடந்தும் மாணவி கொடுத்த புகார் வழக்கு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இதையடுத்து மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டம் தெரிவித்தது. 

இதையடுத்து கடந்த 22 ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவியும் மாதர் சங்கத்தினரும் மகளிர் ஆணையத் தலைவரை சந்தித்து புகார் அளித்ததுடன் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

இதனைத்தொடர்ந்து  மயிலாப்பூர் காவல் துணை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இதையடுத்து மாணவியின் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர், மாணவர்களை தேடி தனிப்படை போலீசார் மேற்குவங்கம் விரைந்துள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐஐடி முன்னாள் மாணவர் கிங்ஷீக்தேவ் ஷர்மாவை தனிப்படை போலீசார் கொல்கத்தாவில் கைது செய்துள்ளதாகவும், மற்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com