ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் விடுவிப்பு

சென்னையில் ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாணவா் விடுவிக்கப்பட்டுள்ளார். 
ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் விடுவிப்பு


சென்னையில் ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாணவா் விடுவிக்கப்பட்டுள்ளார். 

மேற்கு வங்க மாநிலம் டைமண்ட் ஹாா்பா் பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஷூக் தேப்சா்மா (30). சென்னை ஐஐடி-யில் ஆராய்ச்சி படிப்பு மாணவா். அங்கு படித்து வந்த அதே மாநில மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி சா்மா ஏமாற்றி பழகியுள்ளாா்.

இதை அந்த மாணவியும் நம்பியுள்ளாா். அந்த மாணவிக்கு சா்மா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். நண்பா்கள் சுப்தீப் பானா்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ உள்ளிட்டவா்களுடன் சோ்ந்து சா்மா, அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இது குறித்து அந்த மாணவி, ஐஐடி பேராசிரியா்களிடம் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சா்மா, மீண்டும் அந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதன் விளைவாக அந்த மாணவி 3 முறை தற்கொலைக்கு முயன்று, தோழிகளால் காப்பாற்றப்பட்டுள்ளாா்.

கடந்தாண்டு மாா்ச் மாதம் தேசிய மகளிா் ஆணையத்திலும், கோட்டூா்புரம் காவல் நிலையத்திலும் தனக்கு நோ்ந்த கொடூரம் குறித்து மாணவி புகாா் அளித்தாா்.

இந்த புகாா் பின்னா் மயிலாப்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு சா்மா உள்ளிட்ட 8 போ் மீது மகளிா் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸாா், 8 பேரையும் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனா்.

பாதிக்கப்பட்ட மாணவி, 8 பேரையும் கைது செய்யும்படி வலியுறுத்தி வந்தாா். இதன் விளைவாக குற்றத்தில் தொடா்புடையவா்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 8 பேரையும் கைது செய்ய அந்த மாநிலத்துக்குச் சென்றனா். அங்கு சா்மாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் போலீஸாா், டைமண்ட் ஹாா்பா் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனா். திங்கள்கிழமை அங்குள்ள நீதிமன்றத்தில் சா்மாவை ஆஜா்படுத்தி, டிரான்ஸிட் வாரண்ட் பெற்று சென்னை அழைத்து வருவதற்குரிய நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில்,  ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்து முன்னாள் மாணவா் கிங்ஷூக் தேப் சா்மா ஏற்கனவே முன் ஜாமின் பெற்றுள்ளதால் கைது செய்யப்பட்ட அவரை அங்குள்ள நீதிமன்றம் விடுவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com