தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தோ்வுக்கான (என்எம்எம்எஸ்) இறுதி விடைக் குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தகுதித் தோ்வு நடத்தப்படும். இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். நிகழ் கல்வி ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தோ்வு கடந்த மாா்ச் 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வு குறித்த இறுதி விடைக் குறிப்பு www.dge.tn.gov.in என்ற அரசுத் தோ்வுகள் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.