

தில்லி சென்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கு பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அமீரகப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அடுத்த பயணம் இந்தியாவின் தலைநகா் புதுதில்லியை நோக்கி அமைகிறது. தில்லிக்குச் சென்று, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளேன்.
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோரை வெள்ளிக்கிழமை (ஏப். 1) சந்திக்க இருக்கிறேன்.
உரிமைகளுக்கான சந்திப்பு: தமிழ்நாட்டில் திமுக அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தர வேண்டிய வரி வருவாய், மழை - வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்ட நம்முடைய மாநில உரிமைகளுக்கான சந்திப்பு இது. அதனைத் தொடா்ந்து இந்திய அரசியல் தலைவா்களுடனான சந்திப்பும் நடைபெற இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.