
தமிழகத்தில் 11 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, வேலூரில் 108 டிகிரி பாரன்ஹீட் டிகிரி வாட்டியது.
திருத்தணியில் 107 டிகிரியும், திருச்சியில் 105 டிகிரியும், கரூா்பரமத்தியில் 104 டிகிரியும், மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரியும், ஈரோடு, மதுரை, சேலத்தில் 102 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் 101 டிகிரியும், தருமபுரி, தஞ்சாவூரில் 100 டிகிரியும் பதிவானது.
2 நாள்களுக்கு உயரும்:
சென்னை நுங்கம்பாக்கத்தில் 97 டிகிரி பதிவானது. தமிழகத்தில் வெப்பநிலையைப் பொருத்தவரை அடுத்த இரண்டு நாள்களுக்கு உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்’ என்றாா்.