சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் முன்னாள் அமைச்சருக்கு தொடர்பா? என்கிற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் இன்று கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சுட்டுவதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும். அப்படி புகழ்பெற்ற சென்னை கிழக்கு கடற்கரை சாலை பெயர் மாற்றப்படுவதை பொதுமக்கள் கூட விரும்ப மாட்டார்கள். அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகத்தை அதிகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவியர் மோதிக் கொள்வது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதிகரித்துள்ளது.
விலைவாசி மற்றும் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை விழிப்போடு இருந்தால் மாணவிகள் சண்டை போல் பிரச்னைகள் வராது. அடுத்த பொதுத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை மட்டுமே. ஹிந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.
சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் மறு விசாரணை நடத்தலாம், எந்த பிரச்னையும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயகனாக அறிமுகமாகும் விலங்கு, மாமன் பட இயக்குநர்..! முதல் பார்வை விடியோ!
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |

மே.வங்கத்தில் பதற்றம்! அபிஷேக் பானர்ஜியின் வீட்டுக்கு வழங்கிய பாதுகாப்பு வாபஸ்!

விஜய்யுடன் தலைமைச் செயலர், டிஜிபி ஆலோசனை!
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


