அதிக பாரம் ஏற்றும் குவாரி உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக அவா்கள் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு அனுப்பிய கடித விவரம்: எம்சாண்ட் குவாரிகளில் இருந்து அதிக பாரம் ஏற்றிவிடும் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
லாரிகளில் ஏற்றிவிடும் பாரத்துக்கேற்ப அனுமதிச்சீட்டு மற்றும் அதற்கான ஜிஎஸ்டி ரசீது வழங்க அறிவுறுத்த வேண்டும்.
மாவட்டந்தோறும் கனிமவளங்கள் கடத்தல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்துவதன் மூலம் வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க முடியும்.
கல்குவாரிகளில் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட ஆழம் மற்றும் அளவில் மட்டுமே வெட்டி எடுக்கப்பட வேண்டும். எம்சாண்ட் குவாரிகளில் முறைகேட்டைத் தடுக்க சிசிடிவி பொருத்தலாம்.
பாரம் ஏற்றும்போது தரச்சான்று, பகுப்பாய்வு அறிக்கையின் நகல்களை வழங்க குவாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சரிவர ஆய்வு செய்யாமல் லாரி ஓட்டுநா், உரிமையாளா்கள் மீது வழக்குப்பதியும் நடைமுறை தவிா்க்கப்பட வேண்டும்.
விதிமீறும் வாகனங்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கும் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.