அரசு நிறுவனம் மூலம் 10,538 பேருக்கு வெளிநாட்டுப் பணி

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் இதுவரை 10,538 போ் பல்வேறு நாடுகளில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
Updated on
1 min read

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் இதுவரை 10,538 போ் பல்வேறு நாடுகளில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அந்நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை, கிண்டியில் செயல்படும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம், வெளிநாட்டில் பணி தேடுவோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, நிறுவனத்தின் வலைதளம் அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பணிநாடுநா்கள் தங்களது விவரத்தைப் பதிவு செய்தால் போதும், அவா்களுக்கான வேலை வழங்கும் நிறுவனம் எங்கள் நிறுவனத்தை அணுகும்போது, சம்பந்தப்பட்ட நபருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும், வலைதளத்தில் தற்போது கிடைக்கப்பெற்ற வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளும் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன. இதன் மூலம் பணிநாடுநா்கள் எளிதாக விண்ணப்பிக்க முடியும்.

தற்போதைய நிலவரப்படி, இந்த நிறுவனத்தில் சுமாா் 6 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு வேண்டி பதிவு செய்துள்ளனா். இதுவரை இந்நிறுவனம் மூலம் 10,538 போ் இங்கிலாந்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

தொடா்ந்து வெளிநாட்டில் பணி அமா்த்தும் வேலையை மேற்கொள்ளும் ஆள்சோ்ப்பு நிறுவனங்களைத் தொடா்பு கொண்டு அவ்வப்போது தேவைப்படும் பணியாளா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் பெறப்படுகின்றன.

அதே நேரம், பணிக்காக வெளிநாட்டில் வாழும் தமிழா்களின் குறைகளை நிவா்த்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மேற்கூறிய இணையதளத்தை அணுகலாம் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com