'என் உயிருக்கு ஆபத்து: மோடி - அமித் ஷாவை சந்தித்து முறையிட உள்ளேன்'

என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாரதப் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட உள்ளேன்,என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். 
'என் உயிருக்கு ஆபத்து: மோடி - அமித் ஷாவை சந்தித்து முறையிட உள்ளேன்'
Published on
Updated on
1 min read


என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாரதப் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட உள்ளேன்,என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்து நடந்த பகுதியையும், அப்பர் மடத்தினை மதுரை ஆதினம் ஆதீனம் பார்வையிட்டு மெளன அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதீனத்திற்கு சொந்தமான இந்தக் கோயில்களின் சொத்துக்களை வைத்துக் கொண்டு ஆளும் கட்சியினர் மிரட்டுவதாகவும்,  குத்தகை தொகையை தர முடியாது என மிரட்டுகிறார்கள்.

உன்னால் திருப்பணி செய்ய முடியுமா, ஊருக்குள் நுழைய முடியுமா என ஆளும் கட்சியினர் மிரட்டுகிறார்கள்.  என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாரதப் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட உள்ளேன்.

கஞ்சனூரில் என்ன பிரச்சனை இருந்தாலும், கவலை இல்லை. எங்களுக்கு கோவிலுக்கு நான் செல்கிறேன்.  இவர்கள் என்ன தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

மேலும் மதசார்பற்ற நாடு என கூறிக்கொண்டு, ஒரு மதத்ததிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதல்ல. ஒரு மதத்தை அழித்து விடலாம் என நினைக்கிறார்களா? அது வெள்ளைக்காரனால்  கூட முடியவில்லை, இவர்களால் என்ன செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

மன்னார்குடி ஜீயர்

இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோவில்களில் தலையிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி ஜீயர்
மன்னார்குடி ஜீயர்

பின்னர் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமனுஜர் கூறுகையில், பட்டினப் பிரவேசம் என்பது சம்பிராயத்தில் இருக்க கூடியது. பட்டின பிரவேசத்தை யாராலும் தடுக்கக் முடியாது.

அதை எந்த அரசாங்கமும்,  எந்த ஒரு இயக்கமும் தடுக்க முடியாது. பட்டினப் பிரவேசம் நடந்தே தீரும். அதை யாராலும் நிறுத்த முடியாது. இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோவில்களில் தலையீடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com