
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த வாரம் முதலாமாண்டு மாணவர்களுக்கு நடைபெற்ற விழாவில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சமஸ்கிருத உறுதிமொழி, மருத்துவக் கழிவை கையாள்வது குறித்து இன்று பிற்பகலில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் ஆலோசனையில், மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.