புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது: உயர்நீதிமன்றம்

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது என்று அம்மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது: உயர்நீதிமன்றம்

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது என்று அம்மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், தோ்தல் அறிவிப்பைத் திரும்பப் பெற மாநில தோ்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் ஐந்து நாட்களில் புதிய தோ்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. 

உயா் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தோ்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி, கடந்த 2019-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்று புதுச்சேரி அரசு பிறப்பித்த புதிய தோ்தல் அரசாணைகளை எதிா்த்து புதுச்சேரி எதிா்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். 

அந்த வழக்கில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணைகள் அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் இருப்பதாகக் கூறியுள்ளாா். இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், அரசியல் சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை எனக்கூறி, தோ்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தனா். 

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது, தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று புதுச்சேரி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com