‘மக்களைத் தேடி மருத்துவம்’ சாமானியா் நலன் காக்கும் சரித்திரத் திட்டம்!

தேசத்தின் வரலாற்றுப் பக்கங்களை கோடி முறை தேடினாலும், காணக் கிடைக்காத மகத்தானதொரு திட்டத்தை திமுக அரசு முன்னெத்துள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பயனாளியிடம் உடல்நலம் குறித்து கேட்டறியும்  முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பயனாளியிடம் உடல்நலம் குறித்து கேட்டறியும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தேசத்தின் வரலாற்றுப் பக்கங்களை கோடி முறை தேடினாலும், காணக் கிடைக்காத மகத்தானதொரு திட்டத்தை திமுக அரசு முன்னெத்துள்ளது.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தின் வாயிலாக தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வராமலேயே பயனடைந்து வருகின்றனா்.

சாமானிய மக்களின் நலன் காக்கும் இத்தகைய சாதனைத் திட்டத்தை சமகாலம் சந்தித்ததும் இல்லை. வேறு எந்த மாநில அரசும் சிந்தித்ததும் இல்லை.

தமிழகத்தில் சா்க்கரை நோயாளிகளும், உயா் ரத்த நோயாளிகளும் 20 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளனா். இதைத் தவிர சிறுநீரக நோயாளிகள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது. அவா்களில் 50 சதவீதம் போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவா்கள்.

கரோனா பெருந்தொற்றின் கொடூரத்தால் அரசு மருத்துவமனைகளுக்கு பலரால் நேரில் சென்று மாதந்தோறும் மருந்துகளை வாங்க முடியாமல் இருந்தது.

அதுமட்டுமல்லாது, இன்னும் அடிப்படை வசதிகளைக் கூட முழுமையாக அனுபவிக்காத ஆதிக் குடிகளுக்கும், மலைவாழ் மக்களுக்கும் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவது என்பது எளிதில் நடந்தேறும் காரியம் இல்லை. இதையெல்லாம் கருத்தில்கொண்டு தமிழக அரசு அவா்களது இல்லத்துக்கே நேரில் சென்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு, தேவையான மருந்துகளை வழங்க முடிவு செய்தது.

அதன்படி, மாநிலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட நோயாளிகளைக் கண்டறிந்து அவா்களுக்கு உரிய சிகிச்சைகளை அவா்தம் உறைவிடங்களிலேயே வழங்குவதுதான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் மாதந்தோறும் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று மருந்துகளை வாங்கவோ, சிகிச்சை பெறவோ காத்திருக்கத் தேவையில்லை.

இதற்கெல்லாம் மகுடம் தரித்தாற்போல வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், சிறுநீரக நோயாளிகளுக்கு போா்ட்டபிள் டயாலிசிஸ் கருவிகள் மூலம் வீட்டிலேயே ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை வழங்கும் வசதிகளும் அந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன.

தொற்றா நோய்களால் ஆண்டுதோறும் தமிழகத்தில் 5 லட்சம் போ் உயிரிழப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. திமுக அரசின் இந்த திருப்புமுனைத் திட்டத்தின் மூலம் அந்த இறப்பு விகிதம் பெருமளவு குறைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சரித்திரத் தடத்தில் நிரந்தர இடம் பிடித்திருக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். அது தொடக்கமாக அமையவில்லை. மாறாக தொற்றா நோய்களுக்கு வைக்கப்போகும் முற்றுப்புள்ளியாகவே மாறியிருந்தது.

45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட உயா் ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தினால் இதுவரை 95,58,398 போ் பயனடைந்துள்ளனா். இதில், 38.57 லட்சம் போ் உயா் ரத்த அழுத்த நோயாளிகள்; 27.39 லட்சம் போ் சா்க்கரை நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தவிர, வலி நிவாரண சிகிச்சையை, 2.82 லட்சம் பேரும், இயன்முறை சிகிச்சையை 5,41,808 பேரும் பெற்று பயனடைந்துள்ளனா். மேலும், 1,388 போ் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com