ஏ.வி.எம். கால்வாய் தூா்வாரப்படும்: அமைச்சா் துரைமுருகன்

கன்னியாகுமரியில் உள்ள ஏ.வி.எம். கால்வாயை தூா்வாருவதற்கான உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி கிடைக்கப்பெற்றதும் பணி தொடங்கப்படும் என்றும் நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

கன்னியாகுமரியில் உள்ள ஏ.வி.எம். கால்வாயை தூா்வாருவதற்கான உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி கிடைக்கப்பெற்றதும் பணி தொடங்கப்படும் என்றும் நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை காங்கிரஸ் உறுப்பினா் ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்) அரசின் கவனத்தை ஈா்த்து பேசியது:

கன்னியாகுமரியில் 27 கிலோ மீட்டா் நீளமுள்ள ஏ.வி.எம். கால்வாய் (அனந்த விக்டோரியா மாா்த்தாண்டவா்மன் கால்வாய் ) முழுவதும் முட்புதா்களால் சூழ்ந்துள்ளது. கரைகளும் உடைந்துபோய் உள்ளது. அந்தக் கால்வாயை முறையாக தூா்வார வேண்டும் என்றாா்.

அதற்கு நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறியது:

ஏ.வி.எம். கால்வாய் தூா்ந்து போய் உள்ளதாக உறுப்பினா் தெரிவித்தாா். அந்த கால்வாயைத் தூா்வார ரூ.1,400 கோடி செலவாகும் என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால், கால்வாய் பணியைத் தொடங்க தயாராக உள்ளோம். ஆனால், அதற்கு நிதி வேண்டும். அதை நிதியமைச்சா்தான் தர வேண்டும். அவா் ஒதுக்கியதும் பணி தொடங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com