கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு

தேனி மாவட்டம், கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.
கம்பம் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அன்னதானம்.
கம்பம் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அன்னதானம்.

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. இதில், ஆண்,பெண் பக்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 19 தொடங்கி,  21 நாள்கள் நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் அம்மனுக்கு மண்டகப்படி அமைத்து அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.

சித்திரைத் திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.

அன்னதான விழாவில் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆண், பெண் பக்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அன்னதான ஏற்பாடுகளை கே.ஆர் ஜெயபாண்டியன், கலைமணி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com