டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை

தமிழகத்தில் மே 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் குரூப் 2, 2ஏ தேர்வில் ஸ்மார்ட் வாட்ச் அணிய அனுமதியில்லை என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை
டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை


சென்னை: தமிழகத்தில் மே 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் குரூப் 2, 2ஏ தேர்வில் ஸ்மார்ட் வாட்ச் அணிய அனுமதியில்லை என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும், குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருப்பதாவது, குரூப் 2, 2 ஏ தேர்வெழுதும் தேர்வர்கள், தேர்வறையில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் வரும்போது அடையாளம் காண முகக்கவசத்தை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் -2 மற்றும் மற்றும் குரூப் - 2ஏ தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தனது இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.

குரூப்2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 400 பணியிடங்களுக்கு சுமாா் 11 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும் மே 21ஆம் தேதி குருப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெறவுள்ளன.

தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் நுழைவுச் சீட்டு  டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வாணையம் இன்று வெளியிட்டிருந்த நிலையில், தேர்வுக்கு முகக்கவசம் கட்டாயம், ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை என்ற அறிவுறுத்தல்களை தேர்வாணையம் தற்போது வெளியிட்டிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com