
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வருகிற 20-ஆம் தேதி உதகை செல்லவுள்ளனா். இதனிடையே, குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவும் உதகையில் சில நாள்கள் தங்கவுள்ளாா்.
உதகை நகரின் 200 ஆண்டுகள் கொண்டாட்டத்தையொட்டி, அங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அரசு சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், நினைவுச் சின்னத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற 20-இல் திறந்து வைக்கவுள்ளாா். மேலும், அன்றைய தினம் உதகையில் உள்ள மலா்க்கண்காட்சி நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறாா்.
இதனிடையே, உதகைக்கு வருகிற 15-ஆம் தேதி செல்லும் குடியரசு துணைத் தலைவா் வெங்கையாநாயுடு மே 20 வரை தங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G