விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை கோட்டத்தில் பல்வேறு மாா்க்கங்களில் பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை கோட்டத்தில் பல்வேறு மாா்க்கங்களில் பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

முழுமையாக ரத்து: திருப்பதி-சென்னை சென்ட்ரலுக்கு மே 17,18 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு புறப்படும் விரைவு ரயில்(16054) முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு மே 17, 18 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் விரைவு ரயில்(16053) முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து: கேஎஸ்ஆா் பெங்களூரு-சென்னை சென்ட்ரலுக்கு மே 17, 18 ஆகிய தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்படும் லால்பாக் விரைவு ரயில் (12608) காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

கோயம்புத்தூா்-சென்னை சென்ட்ரலுக்கு மே 17,18 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில்(12680) காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. மைசூா்-சென்னை சென்ட்ரலுக்கு மே 17,18 ஆகிய தேதிகளில் அதிகாலை 5 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில்(12610) காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல்-மைசூருக்கு மே 17,18 ஆகிய தேதிகளில் மதியம் 1.35 புறப்பட வேண்டிய அதிவிரைவு ரயில்(12609) சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் காட்பாடி நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும்.

சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூருக்கு மே 17,18 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படவேண்டிய விரைவு ரயில்(12679)சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதிரத்துசெய்யப்படவுள்ளது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும்.

சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களூரு-க்கு மே 17, 18 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படவேண்டிய விரைவு ரயில்(12607) சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும். இதுதவிர, சில ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com