
தெற்கு அந்தமான் கடலில் திங்கள்கிழமை (மே 16) தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெற்கு அந்தமான் கடலில் தொடங்குகிறது.
தெற்கு அந்தமான் கடல், நிக்கோபாா் தீவுகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் தென்மேற்கு பருவமழை திங்கள்கிழமை தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்தப் பகுதியில் வரும் நாள்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
பொதுவாக பருவமழைக்கு இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன் தாக்கும் புயல் பருவமழையை துரிதப்படுத்தும் . அப்படிதான் இந்த முறை பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளது.
வழக்கமாக, அந்தமானில் வரும் 22-ஆம் தேதிதான் பருவமழை தொடங்க வேண்டும். ஆனால் இந்த முறை மே 16 -ஆம் தேதியே தொடங்கவுள்ளது. அதேபோல, வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கும். இப்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தால் கேரளத்திலும் ஒரு வாரத்துக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...