பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் மலை பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக கனமழை  பெய்து வருவதால் ஜமுனாமுத்தூர் வனப்பகுதியில் பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் மலை பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக கனமழை  பெய்து வருவதால் ஜமுனாமுத்தூர் வனப்பகுதியில் பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ள நீரானது மலை பகுதிகளில் இருந்து வரும் உத்திர காவிரி ஆற்றில் (அகரம் ஆறு) கலக்கிறது. இதனால் உத்திர காவிரி ஆற்றில்  காலை முதல் அதிக அளவில் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இந்த உத்திர காவிரி ஆறு அணைக்கட்டு தாலுகா ஒடுக்கத்துர் வழியாக சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வெட்டுவாணம் பகுதியில் பாலற்றில் கலக்கிறது.

கடந்த சில வாரங்களாக உத்திர காவிரி ஆற்றில் செல்லும் நீர் நின்றிருந்த நிலையில் தற்போது கனமழை பெய்தது காரணமாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

இந்த உத்திர காவேரி ஆற்றை ஒட்டி சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இப்பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர தொடங்கியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர்.

மேலும், பள்ளிகொண்டா பகுதி வழியாக செல்லும் பாலாற்றில் வேலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com