தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

தமிழகத்தின் அடுத்த முதல்வராக உதயநிதி ஸ்டாலின் தயார்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து முதல்வராக உதயநிதி ஸ்டாலின் தயாரக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். 

உதயநிதி ஸ்டாலின்

Published On :



ஸ்ரீவில்லிப்புத்தூர்: மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து முதல்வராக உதயநிதி ஸ்டாலின் தயாரக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் இன்னும் 20 ஆண்டுகள் முக.ஸ்டாலின்தான் முதல்வர்.

கருணாநிதிக்கு பின் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது போல, அவருக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க தயாராக உள்ளதாகவும், வாரிசாக இருந்தாலும் இருவரும் பல்வேறு சிரமங்களைத் தாண்டி மேலே வந்தவர்கள் என கூறினார். 

மேலும், திமுகவை எதிர்த்து சண்டை போட ஆள் இல்லை. முதலில் நீங்கள் அனைவரும்(அதிமுக) ஒன்று சேர்ந்து சண்டைக்கு வாருங்கள் என விமர்சித்தவர், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் கேடு கேட்ட ஆட்சி நடைபெற்றதாகவும், அவர்கள் அரசு கஜானாவை சுரண்டிவிட்டதாக குற்றம்சாட்டியவர், தற்போது, நல்ல ஆட்சி நடைபெற்று வருவதாகவும், நமது முதல்வர் நல்ல முதல்வர். ஒவ்வொருவர் குடும்பத்திலும் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். 

மேலும், தில்லிக்கு பயப்படாத ஒரு தலைமை நமது தலைமை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.