
மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்து மே 25ஆம் தேதி முதல் ஒருவாரத்திற்கு தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மார்க்சிஸ்ட் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் இன்று காலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதையும் படிக்க | மே 31ல் நெல்லை, தென்காசி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
அப்போது கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:
“மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து மிகப்பெரிய கண்டன இயக்கத்தை நடத்த தீர்மானம் செய்துள்ளோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் மே 25 முதல் 31ஆம் தேதி வரை கண்டன இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும்.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு சிறிதளவு குறைத்துள்ளது. 2014 முதல் 200 சதவீதம் அளவிற்கு வரியை உயர்த்திவிட்டு, 7 சதவீதம் மட்டும் குறைப்பது முழுமையான நிவாரணமாக இல்லை. 2014இல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72, ஒரு லிட்டர் டீசல் ரூ. 55ஆக இருந்தது.
எனவே, மத்திய அரசு உயர்த்தியுள்ள செஸ் வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதேபோல், சமையல் எரிவாயு மீது உயர்த்தப்பட்டுள்ள அனைத்து விலை உயர்வையும் திரும்பப் பெற வேண்டும். எரிவாயு விலை உயர்வு காரணமாக அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்து மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.