அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ரூ.31,500 கோடி திட்டங்கள் இன்று தொடக்கம்: பிரதமா் மோடி, முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு

தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 26) தொடக்கி வைக்கிறார்.

News image
Updated On :25 மே 2022, 11:17 pm

DIN

சென்னை: தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 26) தொடக்கி வைக்கிறார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹைதராபாதில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு தளத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து சாலை வழியாக நேரு விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 5.45 மணியளவில் வருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், நிறைவடைந்த 5 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

75 கி.மீ. தொலைவுள்ள ரூ.500  கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை}தேனி இடையேயான அகல ரயில் பாதை,  சென்னை தாம்பரம்}செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தொலைவுக்கு ரூ.590 கோடி மதிப்பில் மூன்றாவது ரயில் பாதையை தொடக்கி வைக்கிறார். இதன்மூலம் புறநகர் ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு, பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும்.

மேலும், ரூ. 850 கோடி மற்றும் ரூ. 910 கோடி  மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 115 கி.மீ. நீளமுள்ள எண்ணூர்}செங்கல்பட்டு பிரிவு மற்றும் 271 கி.மீ. நீளமுள்ள திருவள்ளூர்}பெங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டங்களை பிரதமர் தொடக்கி வைக்கிறார். இந்தத் திட்டங்கள், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் உள்ள நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் இயற்கை எரிவாயு விநியோகத்தை எளிதாக்கும்.

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளை பிரதமர் திறந்து வைக்கிறார்.

அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, இரவு 7.45 மணியளவில் சென்னையில் இருந்து தில்லிக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் செல்கிறார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக சென்னைக்கு வந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து அரசுத் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ரூ.28,500 கோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல்

ரூ.28,500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ள 6 திட்டங்களுக்கு பிரதமா் அடிக்கல் நாட்ட உள்ளாா். இதில் 262 கி.மீ. தொலைவு பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை ரூ. 14,870 கோடியில் அமைக்கப்படவுள்ளது.

சென்னை துறைமுகம்- மதுரவாயலை இணைக்கும் 21 கி.மீ. தொலைவு ஈரடுக்கு, நான்குவழி உயா்நிலை சாலை ரூ.5,850 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

நெரலூரு-தருமபுரி பிரிவில் 94 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலை, மீன்சுருட்டி-சிதம்பரம் பிரிவில் 31 கி.மீ. இருவழிச் சாலை ஆகியன முறையே ரூ.3,870 கோடி மற்றும் ரூ.720 கோடியில் அமைக்கப்படவுள்ளன. இந்தத் திட்டங்களுக்கும் பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை எழும்பூா், ராமேசுவரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்தத் திட்டம் ரூ. 1, 800 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.

ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உருவாக்கப்படவுள்ள பன்மாதிரி போக்குவரத்துப் பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.