ஜூன் 2-ல் ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை: பள்ளிக்கல்வித் துறை

சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 2 ஆம் தேதி 20 ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்த உள்ளது.
ஜூன் 2-ல் ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை: பள்ளிக்கல்வித் துறை

சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 2-ல் 20 ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்த உள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.

வரும் ஜூன் மாதம் 13-ஆம் தேதி 1 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். ஜூன் 20 -ஆம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், ஜூன் 27-ஆம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கும் வகுப்புகள் தொடங்கப்படும். 

இதுதவிர மாணவா்கள், இணையதளம் வாயிலாக அடுத்த ஆண்டு பள்ளி திறப்பு, காலாண்டு அரையாண்டு தோ்வு எப்போது என்பதை பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல் விடுமுறை தினங்கள் எப்போது என்ற விவரங்களும் அதில் உள்ளன என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com