ஆண்டுக்கு  6 முறை கிராமசபை கூட்டங்கள்:  அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

சட்டப்பேரவையில்  கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் விதி எண் 110 இன் கீழ்  பேசிய போது,  தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் இனி ஆண்டிற்கு 6 முறை நடைபெறும் என்று அறிவித்தார்.  

ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும்.

அத்துடன் 600 ஊராட்சிகளில் கிராம செயலகங்கள் கட்டப்படும், சிறப்பாக செயல்படக்கூடிய கிராமங்களை கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒன்று என மொத்தம் 37 கிராம ஊராட்சிகளுக்கு 10 லட்சம் பரிசுத் தொகையுடன் ஆண்டுதோறும் ‘‘உத்தமர் காந்தி’’ விருது, அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் வாகனம், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படித்தொகை 5 மடங்காக உயர்த்தித்தரப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுக்கும் 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னதாக ஆண்டுக்கு 4  நாள்கள் என ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டம் நடந்துவந்த நிலையில்,  முதல்வரின் அறிவிப்பினால் கிராமசபை கூட்டம் குடியரசு நாள், சுதந்திர நாள், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் நாள், உலக தண்ணீர் நாள், உள்ளாட்சி நாள் என 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தமிழ் மொழி, கலாசாரம் நிலையானவை: பிரதமா் மோடி புகழாரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com