சென்னை மழை: உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையைல், மாநகராட்சி நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது.
சென்னை மழை: உதவி எண்கள் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையைல், மாநகராட்சி நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் மூலம் வெள்ளநீர் வெளியேறியுள்ள நிலையில், சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர் வெளியேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச உதவி எண் 1913 மூலம் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நம்ம சென்னை செயலி அல்லது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் மூலமாகவும் உதவியை நாடலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X