மதுரை எய்ம்ஸ் தாமதமானது ஏன்? - தமிழிசை பேட்டி 

தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எதனால் தாமதமானது  என பொதுமக்களுக்கு தெளிவாக விளக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா
மதுரை எய்ம்ஸ் தாமதமானது ஏன்? - தமிழிசை பேட்டி 



தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எதனால் தாமதமானது  என பொதுமக்களுக்கு தெளிவாக விளக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்ததாக அவருடனான சந்திப்புக்கு பின்னர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

தில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவை, தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

சந்திப்புக்கு பின்னர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

புதுச்சேரியில் தமிழ்வழி மருத்துவக்கல்வி, மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகள் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் போன்ற கோரிக்கைகள் முன் வைத்தேன். தனி மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொண்டு வருகிறோம். இதற்கு முழுமையான ஆதரவும், ஒத்துழைப்பும் தர வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். 

புதுச்சேரியில் தமிழ்வழி மருத்துவக்கல்வி, மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அனுமதி கோரிக்கை மனுவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அளித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

மேலும், உலகத்தரம் வாய்ந்த போதை பொருள்கள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைப்பதற்கான கோப்புகள், ஆரம்பர சுகாதார நிலையங்களை புதுப்பிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையெல்லாம் பரிசீலனை செய்வதாக அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்தார். 

மேலும், தமிழகத்தின் மதுரை எய்ம்ஸ் குறித்தும் நான் கேட்டேன். 

அதற்கு, தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தெலங்கானா, பிபி நகர் ஏய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்தார். அதற்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டேன். 

மதுரை எய்ம்ஸ் தாமதம் ஏன்? மதுரை எய்ம்ஸ் தொடங்குவதில் கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தின் கால தாமதத்தால் பணிகள் தாமதமாகி வருகிறது என்றும், இரண்டு வாரத்திற்குள் ஒப்பந்தத்தில் அனைத்தும் விரைவு படுத்தப்பட்டு, மிக விரைவில் மதுரை எய்ம்ஸ் இயங்கும் அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படும் என உறுதி அளித்தார். 

மேலும், கட்டுமான பணிகள் ஆரம்பிக்கும்போது எதனால் தாமதமானது என மக்களுக்கு தெளிவாக விளக்கப்படும். இதில், எந்தவித உள்நோக்கமும் இல்லை. தமிழக மக்களுக்கு எய்ம்ஸ் வரவேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தீவிரமாக உள்ளோம் என்பதை மன்சுக் மாண்ட்வியா கூறியதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com