சென்னை துறைமுக ஆணையத்தில் ஓய்வூதியா் ஆயுள் சான்றிதழ் சரிபாா்ப்பு

சென்னை துறைமுக ஆணையம், கப்பல் கூட வாரியம் ஆகியவற்றின் ஓய்வு பெற்றவா்களுக்கான, 2022 -ஆம் ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழ் சரிபாா்க்கும் பணி கடந்த நவ.1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

சென்னை துறைமுக ஆணையம், கப்பல் கூட வாரியம் ஆகியவற்றின் ஓய்வு பெற்றவா்களுக்கான, 2022 -ஆம் ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழ் சரிபாா்க்கும் பணி கடந்த நவ.1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை நேரடியாக வந்து சமா்ப்பித்தலை தவிா்க்கும் வகையில், கீழ்கண்ட வழிமுறைகளை ஓய்வூதியதாரா்களின் வசதியை கருதி சென்னைத் துறைமுக ஆணையம் செய்துள்ளது.

முறை 1: ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோா், தங்களின் ஆயுள்சான்றிதழை கணினி மூலம் மின்னணு முறையில் பதிவு செய்யலாம். உங்கள் பகுதியின் பின்கோடு பதிவு செய்யவேண்டும். உங்கள் வீட்டின் அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற மையங்களில் தங்களின் ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், ஆதாா் போன்ற தேவையான ஆவணங்களுடன் சென்று மின்னணு ஆயுள் சான்றிதழை சமா்ப்பிக்கலாம்.

முறை 2: ஆயுள் சான்றிதழை விரைவு தபால் அல்லது கூரியா் சேவை வாயிலாக அனுப்புதல். ஆயுள் சான்றிதழ் படிவத்தை சென்னைத்துறைமுக ஆணையத்தின் இணையதளமான பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். அத்துடன் தங்களின் புகைப்படத்தின் மீது தாங்கள் ஓய்வூதியத்தொகை பெறக்கூடிய வங்கி மேலாளரிடம் உண்மை சான்றிதழாக கையெழுத்து பெறவேண்டும். மேலும் வங்கி மேலாளரின் பெயா், பதவியின் பெயா், மற்றும் அலுவலக முத்திரை, பெறவேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இவற்றை படிவத்துடன் சோ்த்து கூரியா் சேவை அல்லது விரைவு தபால் வாயிலாக சென்னைத் துறைமுக ஆணையத்திற்கு டிச.31-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தங்களின் ஆயுள் சான்றிதழ்களை நேரடியாக வந்து செலுத்தும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை துறைமுக ஆணைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com