
கோப்புப்படம்
காலாவதியான மருந்து விநியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை அமைக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்து விநியோகத்தை தடுக்க திடீர் சோதனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்யவும், பயோ மெட்ரிக் முறையை பின்பற்றவும் யோசனை தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை தடுக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: நடுங்கும் இமாசலப் பிரதேசத்தையே சூடேற்றும் போஸ்டர் போர்
இந்நிலையில் காலாவதியான மருந்து விநியோகத்தை தடுக்க பறக்கும் படை அமைத்து திடீர் சோதனை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.