
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுகிறார் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி.
கோவில்பட்டி: கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
கோட்டாட்சியர் மகாலட்சுமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜா, கோட்டாட்சியர் அலுவலக தலைமை எழுத்தர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர்கள் சுசிலா (கோவில்பட்டி), சுப்புலட்சுமி (கயத்தாறு), சசிகுமார் (விளாத்திகுளம்), நிஷாந்தினி (ஓட்டப்பிடாரம்), கிருஷ்ணகுமாரி (எட்டயபுரம்) மற்றும் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோசுவா, பாஜகவை சேர்ந்த விஜயகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முனியசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க | வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்!
கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,24,776 ஆண்கள், 1,30,708 பெண்கள், 29 திருநங்கைகள் என மொத்தம் 2,55,513 வாக்காளர்கள் உள்ளனர்.
விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,04,416 ஆண்கள், 1,08,932 பெண்கள், 16 திருநங்கைகள் என மொத்தம் 2,13,364 வாக்காளர்கள் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 1,19,562 ஆண்கள், 1,24,966 பெண்கள், 48 திருநங்கைகள் என மொத்தம் 2,44,576 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவில்பட்டி கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 7,13,453 வாக்காளர்கள் உள்ளனர்.