
மேட்டூர் அணை
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை தொடர்ந்து 3 ஆவது நாளாக 15,000 கன அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் லேசான மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 3 ஆவது நாளாக வினாடிக்கு 15,000 கன அடியாக நீடித்து வருகிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாா் புதுப்பிப்பு அவசியம்: விதிகளில் திருத்தம்
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 31-ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.