சிதம்பரம் வெள்ள சேதங்கள்: நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர்!
கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கி உள்ள விளை நிலங்கள் மற்றும் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

வல்லம்படுகை கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமி, குமுதா, மல்லிகா, வளர்மதி, பத்மாவதி, மல்லிகா ஆகிய 5 பேருக்கு நிவாரண உதவித் தொகையை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.









