
மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் நிலைதடுமாறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருச்சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் நிலைதடுமாறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருச்சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு எலக்ட்ரிக் பைக் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம், அண்ணா பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் ராஜேஷ் என்பவர் தனது தாய் கல்யாணி, மனைவி அமுதா மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்று விட்டு மீண்டும் மதுரை திரும்பியுள்ளனர்.
கார், மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை கைக்காட்டி அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது தொடர் மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி காரணிக்குளம் நிழற்கொடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருச்சக்கர வாகனங்கள் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கார் மோதியதில் எரியும் எலக்ட்ரிக் பைக்
இதையும் படிக்க | வரும் 17-ம் தேதி முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்து சேவை: போக்குவரத்துத் துறை அறிவிப்பு
இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் மற்றும் இருச்சக்கர வாகன ஓட்டியான கைக்காட்டி கருப்பையா ஆகியோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குள்ளான 6 இருச்சக்கர வாகனங்களில் ஒரு எலக்ட்ரிக் பைக் முற்றிலும் எரிந்து நாசமானது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வளநாடு போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.