சென்னையில் பனிப்பொழிவா? ட்ரெண்டிங்கில் 'சென்னையில் ஸ்நோ'

சென்னையில் கடந்த சில நாள்களாக குளிர் அதிகரித்து வருவதால்,  'சென்னையில் ஸ்நோ' என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 
சென்னையில் பனிப்பொழிவா? ட்ரெண்டிங்கில் 'சென்னையில் ஸ்நோ'


சென்னையில் கடந்த சில நாள்களாக குளிர் அதிகரித்து வரும் நிலையில்,  'சென்னையில் ஸ்நோ' என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. 

மழை ஒருபுறம் இருக்க, கடந்த ஒரு வாரமாகவே சென்னையில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், குளிரும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நவம்பர் (கார்த்திகை) மாதத் பனிக்காலத் தொடக்கம் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஜனவரி இறுதி வரை பனிக்காலம் இருக்கும்.

இதனிடையே கார்த்திகை மாத தொடக்கம் முதலே அதிகாலையில் அதிக அளவிலான குளிர் நிலவுகிறது.  சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து செல்கின்றனர்.

மேலும், இன்று (நவ.21) காலை 10 மணியாகியும் குளிர் நிலவியதால், வேலைகளுக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். இன்று சராசரியாக 21 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், சுட்டுரையில் 'சென்னையில் ஸ்நோ' என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலர்  சென்னையில் ஸ்நோ என்ற ஹேஷ்டேக்கைப் பதிவிட்டு, பலர் நையாண்டியாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இன்னும் 2 நாட்களில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com