அண்ணாமலைப் பல்கலை தனி அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் பணியிறக்கம் செய்யப்படவுள்ளதால், தனி அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள்.

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் பணியிறக்கம் செய்யப்படவுள்ளதால், தனி அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக தமிழக அரசு பல்கலைக்கழகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பல்கலைக்கழக பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர 1928(1) என்ற சட்டத்தை திருத்த செய்து 2013 புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நிதி நெருக்கடியை சீரமைக்க பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்.

பல்கலைக்கழகம் நிதி நெருக்கடி சிக்கியுள்ளதால், மாதந்தோறும் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து  பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் சுமார்  636 பேர் பணியாற்றுகின்றனர்.

தற்போது தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்களை பணியிறக்கம் செய்து, உதவி தனி அலுவலர்களாக புதிய நியமன உத்தரவு வழங்கப்படவுள்ளதாகவும்,  சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து தனி அலுவலர்கள் சங்கத்தினர் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் எங்களது ஊதியத்தை குறைக்கக் கூடாது. அதற்கு சமமான பணியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை பல்கலைக்கழக பூமா கோயில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com