தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசி வருகிறார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் சென்றுள்ளனர். இன்று பிற்பகல் 12. 45 மணிக்கு ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.