இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இது அரசியல் சாசன நாளா? கட்டப் பஞ்சாயத்து நாளா?: யுஜிசிக்கு மதுரை எம்பி கண்டனம்

அரசியல் சாசன நாளன்று கல்லூரிகளில் ‘கிராம பாரம்பரிய பஞ்சாயத்து’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளா

News image
Updated On :23 நவம்பர் 2022, 6:21 am

DIN

அரசியல் சாசன நாளன்று கல்லூரிகளில் ‘கிராம பாரம்பரிய பஞ்சாயத்து’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 26ஆம் தேதி அரசியல் சாசன நாள் கொண்டாடப்படுகிறது. அன்று அனைத்து கல்லூரிகளிலும் "முன்னுதாரன மன்னர்" - "கிராம பாரம்பரிய பஞ்சாயத்து" என்ற தலைப்பில் உரை நிகழ்த்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“அரசியல் சாசனத்திற்கும் பாரம்பரிய பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம்? இது கான்ஸ்டிடியூசன் நாளா? கட்டப் பஞ்சாயத்து நாளா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஜனநாயகத்திற்கான நாளினை சனாதனத்தின் நாளாக மாற்ற கருத்துத்தாள் வழங்கியுள்ள இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் மீதும், யு.ஜி.சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.