எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட தேசிய விருது

எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட தேசிய குவெம்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட தேசிய விருது


எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட தேசிய குவெம்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

யதார்த்தவாத எழுத்தின் முக்கிய படைப்பாளியாக கருதப்படுபவர் எழுத்தாளர் இமையம். இவர் எழுத்தில் இதுவரை 11 நாவல்கள், 2 சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக, ’கோவேறு கழுதைகள்’, ’செடல்’, ‘என் கதெ’, ‘செல்லாத பணம்’ ஆகிய நாவல்கள் விமர்சன ரீதியாகவும் பெரிய அங்கீகாரம் பெற்றவை.

இமையம் எழுதிய ‘பெத்தவன்’ சிறுகதை தமிழில் அதிகம் அச்சிடப்பட்ட கதைகளில் ஒன்று. கடந்த 2020 ஆம் ஆண்டு ’செல்லாத பணம்’ நாவலுக்காக இலக்கியத்திற்கான உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது பெற்றிருந்தார்.

இந்நிலையில், மறைந்த கவிஞர் குவெம்பு நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கன்னட தேசிய கவி குவேம்பு ராஷ்டிரிய புரஸ்கார்’ விருது தமிழ் மொழிக்காக இந்தாண்டு எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுக்குழுவினர் ‘தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்தவர் இமையம். அவரின் பெரும்பாலான எழுத்துக்கள் பெண்ணியத்திற்கான காணிக்கையாகக் கருதலாம்’ என பாராட்டியுள்ளனர்.

விருதுடன் பரிசாக வெள்ளிப்பதக்கமும் ரூ.5 லட்சமும் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com