மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம்: அமைச்சர் விளக்கம்

ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். 

News image
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
Updated On :25 நவம்பர் 2022, 3:54 pm

DIN

ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். 

கோவை பீளமேடு பகுதியில் திமுக இளைஞரணிச் செயலாலர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, 3,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ”திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு 3,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். 211 கோடி ரூபாய் அளவிலான சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிதி விடுவிக்கப்பட்டு டெண்டர் வழங்கி, பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கப்படும்.

90 விழுக்காடு கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 10 சதவீத பணிகளும் இரண்டு, மூன்று மாதங்களில் முடிவடையும். அதிமுக ஆட்சியில் நடந்த வளர்ச்சி திட்டங்களை, 5 ஆண்டுகளுக்குள் முதலமைச்சர் இரட்டிப்பாக்கி தருவார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக அதிமுக, பாஜகவினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகிறார்கள். மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கவில்லை என்றாலும் மின் கட்டணம் செலுத்தலாம். ஆதார் இணைப்பது நல்லது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது அவசியம். பெயர் மாற்றம், ஆதார் எண் இணைப்பு  ஆகியவைகளுக்காக விரைவில் முகாம்கள் நடத்தப்படும். ஆதார் எண் இணைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறையை சீர் திருத்தம் செய்ய ஆதார் எண் இணைப்பது அவசியம்.

கோவையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் சாலை மோசமடைந்ததா? அதிமுக ஆட்சியில் போடாத சாலையை இப்போது போட வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு தரப்படுகிறது. ஆனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதில்லை.

சிறு, குறு நடுத்தர தொழில்துறையினர் உத்தேச மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி 10 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டது. ஒன்றிய அரசு அழுத்தத்தால் தான் கட்டண உயர்வு வந்தது. மின்சாரத் துறை ஒரு இலட்சத்து 51 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் குறைந்த கட்டணமே உயர்த்தப்பட்டுள்ளது.

தொழில் துறையினர் மின் கட்டண உயர்வை இரத்து செய்ய வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.தொழில் துறையினர் குறைந்த அளவிலான மின் கட்டண உயர்விற்கு ஆதரவளித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். மின் கட்டண உயர்வை இரத்து செய்ய எப்படி முடியும்?” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.