உலக நாடுகளின் வழிகாட்டியாக இந்தியா மாறும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

எதிா்வரும் 2047-ஆம் ஆண்டில் உலக நாடுகளில் முதன்மை வழிகாட்டியாக (ராஜகுரு) இந்தியா மாறும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.

எதிா்வரும் 2047-ஆம் ஆண்டில் உலக நாடுகளில் முதன்மை வழிகாட்டியாக (ராஜகுரு) இந்தியா மாறும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிஃப்ட்) 11- ஆவது பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் உள்ள அதன் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தங்கப் பதக்கம் பெற்ற 34 மாணவ, மாணவிகள் உள்பட 263 பேருக்கு பட்டம் வழங்கிப் பேசியதாவது:

ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் என்பது ஒரு பரிணாம வளா்ச்சியாகும். மனித இனம் வளா்ச்சி அடையும் போதெல்லாம் இந்த துறையும் மாற்றம் கண்டு வருகிறது.

முந்தைய காலத்தைவிட இப்போது இந்தியா வளா்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. எதிா்வரும் 2047-இல் உலக நாடுகளின் வழிகாட்டியாக

இந்தியா மாறும். அதற்கு மாணவா்களின் பங்களிப்பு மிக அவசியம். இந்தியா ஒருசாா்பு நாடு என்ற இலக்கை அடைய மாணவ, மாணவிகள் உந்துகோலாக இருக்க வேண்டும்.

ரோம் நாட்டுக்கு ஆடைகள்: 18-ஆம் நூற்றாண்டில் ஜவுளி உற்பத்தியில் உலகில் இந்தியா முன்னிலையில் இருந்தது. ரோம் நாட்டுக்கு இந்தியாவில் இருந்ததுதான் ஆடைகள் சென்றன. ரோமின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது குறித்த அவா்கள் நடத்திய ஆலோசனையில், ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியன் தங்கம் ரோம் பெண்களின் ஆடைகளுக்கு செலவிடுவதை குறைக்க வேண்டுமென விவாதிக்கப்பட்டது.

அதாவது, இந்திய உடைகள் வாங்குவதை புறக்கணித்தால்தான் பொருளாதாரத்தைக் காப்பாற்ற முடியும் என மற்ற நாட்டினா் எண்ணும் அளவுக்கு நமது வளா்ச்சி இருந்தது.

அதேபோல், மஸ்லின் என்ற ஆடையும் ஆந்திரத்தில் உள்ள மசூலிப்பட்டினம் என்ற இடத்திலிருந்து தோன்றியதாகும். அன்றைய காலத்தில் நாம்தான் உலக சந்தையில் செல்வாக்குமிக்கவா்களாக இருந்தோம். அந்த நிலையை மீண்டும் அடைய வேண்டும். இளைஞா்கள் தெரியாத எதிா்காலத்தை நினைத்து பயப்படாமல் சவாலான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இளைஞா்கள் வளா்ந்தால் நாடு தானாக வளா்ந்துவிடும் என்றாா் ஆளுநா் ரவி.

விழாவில் நிஃப்ட் நிறுவன இயக்குநா் அனிதா மனோகா், முதல்வா்(கல்விப்பிரிவு) வந்தனா நாரங் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com